Categories
உலக செய்திகள்

Big News: புற்றுநோய் அபாயம்…. திரும்ப பெறப்படும் ஏரோசால் டிரை ஷாம்புகள்….!!!

சர்வதேச நுகர்வோர் நிறுவனமான யூனிலீவர் ஏரோசோலின் ஷாம்புவை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. டவ், நெக்சாஸ் மற்றும் டிகி உள்ளிட்ட தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சீன் இருப்பது கண்டறியப்பட்டதால் திரும்ப பெறப்பட்டது. இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 2021க்கு முன் வெளியிடப்பட்ட தயாரிப்புகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்பது உத்தரவாகும். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ஏரோசால் சன்ஸ்கிரீன்களும் இந்த வழியில் கட்டுப்படுத்தப்பட்டன.

ஜான்சன் அண்ட் ஜான்சனின் நியுட்ரோஜனா ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த சம்பவமானது துரதிஷ்டவசமானது என்றும் பென்சீன் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகள் அனைத்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கண்டறியப்பட்ட அளவில் பென்சீன் பயன்பாடு உடலில் பிரச்சினைகளை ஏற்பாடு ஏற்படுத்தாது என்றும் கூறுகிறது.

Categories

Tech |