Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தின் போது நடந்த அதிர்ச்சி… “மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் பரிதாப பலி!!

மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2  விவசாயிகள் பலியானை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில்  10 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.. அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்..

இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யகோரி அவருக்கு கருப்புகொடி காட்ட திரண்டனர்..  அப்போது முதல்வரை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்றுள்ளார்.. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் சென்றபோது, அவரையும் விவசாயிகள் வழிமறித்து கருப்புக்கொடி காட்டி உள்ளனர்.

ஆனால் மத்திய அமைச்சர் மகன் கூட்டத்தில் புகுந்து இடித்து தள்ளி காரை எடுத்து சென்றுள்ளார். கார் மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கார் மோதியதில் 8 விவசாயிகள் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகனின் காரை அடித்து உடைத்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால்அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

https://twitter.com/NewDelhiPost/status/1444637453223010310

Categories

Tech |