தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குள்ளாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குள்ளாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஏற்கனவே கனமழையை சந்தித்து இருக்கும் வட தமிழகம் நோக்கி தான் வரும்.. இதனால் 5 நாட்களுக்கு, இன்று 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ச்சியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையின் அளவே இன்னும் ஓயாத நிலையில், 24 மணி நேரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் உறுதிசெய்துள்ளது.. மேலும் 10 மற்றும் 11 இந்த இரண்டு நாட்கள் அதீத கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது..
ஏற்கனவே சென்னை வானிலை மையம் இந்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணிநேரத்தில் பெரம்பூரில் 14 சென்டிமீட்டர் மழை, அதேபோல செய்யூர், மதுராந்தகம், சோழவரம் ஆகிய பகுதியில் 13 செ.மீட்டர், தண்டையார் பேட்டை 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.