Categories
மாநில செய்திகள்

BIG NEWS : மக்களே…. 12 மணி நேரத்தில்… மண்டலமாக வலுப்பெறும்… “6 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட்’ அலர்ட்”..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது..

கடந்த 13ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறும் என்பது முன்னதாக கணிக்கப்பட்டுள்ளது.. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது..

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.. சென்னையிலிருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தென்கிழக்குத் திசையிலும், புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.. தற்போது கிழக்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது.

வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்கிறது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.. வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளிலும் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

 

Categories

Tech |