பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் நடைபெற்று வந்தது.. அதாவது, பாலிடெக்னிக், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்ஜினியரிங் காலேஜ் என அனைத்துக் கல்லூரிகளும் கொரோனா காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெற்று வந்தது..
இந்நிலையில் இதனை மாற்றி தற்போது அனைத்து நாட்களுமே நடத்துவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.. வாரத்திற்கு ஆறு நாட்கள் செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடைபெறும்.. ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செயலாளர் அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.