சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை, மழைநீர் தேக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பசுயில்லா சாலை உள்ளிட்ட இடங்கள், தியாகராய நகர், உஸ்மான் சாலை, பெரும்பாக்கம் நகர், கேகே நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த பிறகு மின் வினியோகம் சரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.