Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: மீண்டும் ஊரடங்கு…? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  மீண்டும் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |