வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே நாளை கரையை கடக்கிறது. குலாப் புயல் உருவாக இருப்பதால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.