தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மாஸ்டர் திரைப்படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தப் படம் வெளியிடுவதில் தடை ஏற்பட்டது. பல தடைகளுக்கு பிறகு கடந்த மாதம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் மாஸ்டர் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.
விஜய்யின் முந்தைய படமான பிகில் திரைப்படத்தின் தமிழக வசூல் 124 கோடி. ஆனால் மாஸ்டர் திரைப்படம் முத்து 40 கோடியை வசூல் செய்து பிகில் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இன்னும் ஒரு வாரம் படம் ஓடினால் 155 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருக்கும் பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்