2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல்அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் இயங்குகின்றன.. எனவே சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.. இந்த நிலையில் 2 முதல் 18 வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, 2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை என்பது கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் இருக்கக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு கூட அந்த எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் அக்டோபர் மாதத்தில் இதற்கான அப்ரூவல் வரும் என்று உறுதியளித்திருந்தார்..
இந்த நிலையில் புதிதாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருந்துகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு வல்லுநர் குழுவானது மூன்று கட்டங்களாக நடத்திய பல்வேறு பரிசோதனை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 2 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்று அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.. இந்த பரிந்துரையை அவர்கள் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.. வல்லுனர் குழு அனுமதியை தொடர்ந்து மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி தரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு இந்த மாதம் கடைசி அல்லது அடுத்த மாதம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் சிறுவர்களுக்கான தடுப்பூசி பணி தொடங்கும் என்று தெரிவித்திருந்தது.. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..