தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.