சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து, 3,600 க்கு ஒரு கிலோ மல்லிகை பூ விற்கப்படுகிறது. பிச்சி பூ 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சிவந்தி, சம்பங்கி போன்ற பூக்கள் எல்லாம் 200 ரூபாய், 250 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
பனிப்பொழிவு அதிகமான காரணத்தால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைவாக இருக்கும். நாளைக்கு கிறிஸ்துமஸ் தினம் என்பதால் மல்லிகை பூவின் தேவை அதிகமாக இருக்கிறது. அதனால் கேரளாவில் உள்ள வியாபாரிகள் வந்ததனால் மல்லிகைபூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக விவசாயிகள் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளனர்.