Categories
அரசியல் மாநில செய்திகள்

காலையிலே பெரும் ஷாக்…! வசமாக சிக்கிய 2ADMK மாஜிக்கள்… திபுதிபுவென வீடுகளில் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!

இன்று காலை அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அம்மா நாளிதழ் வெளியிட்டளர் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும், அதேபோல முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டிலும் அடுத்தடுத்து ஒரே நேரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையினால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் பீதியில் உள்ளனர்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் இன்று காலை முதல் தொடங்கப்பட்ட இந்த சோதனை குறித்து வெளியான தகவலில், வேல்ஸ் குடும்பத்திற்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில்  அனுமதி சான்று மற்றும் கல்லூரிகளில் 300 படுக்கைகள் கொண்ட வசதிகள் இருப்பதாக கூறிய  புகாரின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை,  ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று சோதனை  நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

அதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்பிஐ வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தெருவிளக்குகள் போடப்பட்டதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவும், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அதிகளவில் ஒப்பந்த புள்ளி கொடுத்தத புகார் அடிப்படையில் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இதனால் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 23 இடங்களிலும்,  சி விஜயபாஸ்கருக்கு சொந்தமாக 16 இடங்களிலும் ரெய்டு என கூறப்படுகிறது.

Categories

Tech |