Categories
தேசிய செய்திகள்

BIG SHOCKING: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு – பெரும் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 19,000த்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 11,66,756 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 113 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 14,046 ஆகவும், 16,007 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,37,582 ஆகவும் உயர்ந்துள்ளது.

Categories

Tech |