சுவிட்சர்லாந்தில் கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென்று ஏற்பட்ட பயங்கர சத்தம், மக்களை அதிரச்செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியில் திடீரென்று அதிர வைக்கும் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணம் தெரிய வந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று சுவிஸ் சர்வதேச விமானம் சூரிச்சிற்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது, விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்ற ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, இரண்டு F/A-18 வகை ராணுவ விமானங்கள் அந்த விமானத்தை காப்பாற்ற பரபரப்பாக அதிவேகத்தில் புறப்பட்ட போது தான் அந்த பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. அதன் பிறகு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தி தான் என்று தெரியவந்திருக்கிறது.