தஞ்சை பெரிய கோவிலில் இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குரூப் 4 பொது தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்றும் தினகரன் கூறினார்.