தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், அரியலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரண்டு வாரமாக குறைந்திருந்த வடகிழக்கு பருவமழை இன்று முதல் வலுப்பெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக ஏரி மற்றும் குளங்களின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.