நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால்,அப்பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களை கண்காணிக்கவும், அதிக கூட்டம் மூலம் தொற்று வேகமாக பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கி வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.