நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதால் மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்புள்ளது. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் மூன்றாவது அலை எழுவதை தவிர்க்க முடியா விட்டாலும், அதன் பாதிப்பை தடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.