கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் பூமிக்கு கீழே நில தட்டுகள் சரிந்து அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து, அதிவேகமாக கடல்நீர் தள்ளி ஆழிப்பேரலை ஆக உருவாகி கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக புறப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கி மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய உடமைகளையும் உறவுகளையும் இழந்தனர். இந்நிலையில் ஒரு சில நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் நியூசிலாந்தின் வடகிழக்கில் 650 மைல் தொலைவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகியுள்ளது. ஏற்கனவே நேற்று இரவு 7.4, 7.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் சுனாமி எச்சரிக்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சுனாமி அலைகள் அந்த பகுதியில் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.