உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 20 கோடியைத் தாண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே கொரோனா பேரிடர் காலம் முடிவுக்கு என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக பரவக்கூடியது. அசல் வைரசை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது என அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.