14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராயப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் சென்னை நகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நள்ளிரவு முதல் புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.