Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BigBashLeague : மேஜிக்..! 15 ரன்னில் ஆல் அவுட் ஆன சிட்னி…. மோசமான சாதனை…. அடிலெய்டு அபார வெற்றி..!!

பிக் பாஸ் டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்களுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை சிட்னி பெற்றது.

இந்தியாவில் ஐபிஎல் போலவே ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்களும்,கொலின் டிகிராண்ட் ஹோம் 33 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மேத்யூ கில்க்ஸ் இருவரும்  டக் அவுட் ஆகினர். அதன்பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அடிலெய்டு அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பவர் பிளேவுக்குள் 5.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்தது சிட்னி. சிட்னி அணியில் அதிகபட்சமாக பிரெண்டன் டோகெட் 4 ரன் எடுத்தார்..

ஓவருக்கு 1, 2 என விக்கெட்டுகளை அடுத்தடுத்து விட்டதால் சிட்னி சுருண்டது. இதனால் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது அடிலெய்டு.. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்களுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை சிட்னி பெற்றது. அடிலெய்டு அணியில் அதிகபட்சமாக ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டுகளும், வெஸ் அகர் 4 விக்கெட்டுகளும், மேட் ஷார்ட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்..

https://twitter.com/Master__Cricket/status/1603727454983426048

Categories

Tech |