கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து 3 தர சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்று அசத்தியவர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக… தல என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். மகேந்திர சிங் தோனி கடந்த உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின.
இதுகுறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தன. ஆனால் தோனி ஓய்வு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் நிம்மதியுடன்… தோனியின் வருகைக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் சோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.