Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?….. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

பிக்பாஸ் சீசன்-6 சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது 18 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 22-வது நாளை நெருங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோவில் “ரொம்ப மேனிபுலேட் பன்றமாதிரி இருக்கு, அத்துமீறி பேசுனது பிடிக்கல, பிரச்சனையை பெருசு பண்ண நினைக்குறாரு, எந்த சண்டையிலும் நிக்கமாட்டுறாரு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வார எவிக்‌ஷன்ல தேர்வு செய்திருக்கும் நபர்கள் அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் மற்றும் விக்ரமன் என பிக்பாஸ் குரலில் புரோமோ வெளியாகியது.

Categories

Tech |