இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான ஜனனி இப்போது பிக் பாஸ் 6ஆம் சீசனுக்கு போட்டியாளராக வந்துள்ளார். அவர் 2ஆம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு சிறப்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஜனனி கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். இவர் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள்கூட அவருக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.
அதாவது, “எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போன்று உணர்கிறேன். சில நபர்களுக்கு என்னை பிடிக்கவில்லை. எனக்கு கஷ்டமா இருக்கிறது” என ஜனனி கேமரா முன் கூறி அழுதுள்ளார். எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் ஜனனி இப்படி திடீரென்று கதறி அழுதது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.