தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து சண்டை நடந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த சண்டைக்கு முக்கியமான காரணம் அஸீம். தொடர்ந்து அஸீம் மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி சண்டை போட்டு வருகிறார். சென்ற பல வாரங்களாக கமல் அவரை எச்சரித்து வருகிறார்.
இருப்பினும் அஸீம் தொடர்ந்து சண்டை போடுகிறார். நேற்று சனிக்கிழமை என்பதால் கமல் பிக்பாஸ் ஷோவுக்கு வந்திருந்த நிலையில், அஸீமை கடுமையாக திட்டினார். அதாவது, “ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு என சொல்வாங்க. அஸீம் நான் கூறிக்கொண்டே இருக்கிறேன். நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா. இனி மாற்றிக்கொள்கிறேன் என சொல்கிறார்.
ஆனால் மாறவே இல்லை. ரெட் கார்ட் கொடுக்க வேண்டியதானே என கேட்கிறார்கள். அவ்வாறு கோபம் வரும்போதெல்லாம் ரெட் கார்டு அடித்தால் எனக்கும், அஸீமுக்கும் வித்தியாசம் இல்லையா. உங்களை நான் திட்டுறேன் என்று நினைக்காதீங்க!.. அப்படி நினைத்தாலும் தப்பில்லை” என கூறி அஸீமை திட்டியிருக்கிறார்..