தமிழ் சின்னத் திரையில் சென்ற 5 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். அதன்படி இதுவரையிலும் 5 பேர் வெளியேறி இருக்கின்றனர். இப்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
சுமார் 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசிம், ஆயிஷா, தனலட்சுமி, ராபர்ட், ஜனனி, கதிரவன், நிவாஸினி, குயின்சி போன்றோர் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேற உள்ளார். அந்த அடிப்படையில் மக்களின் வாக்குகள் அடிப்படையில், ஓட்டுக்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் மக்களின் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் அசிம், 2ஆம் இடத்தில் ஜனனி, 3ம் இடத்தில் தனலட்சுமி, 4ம் இடத்தில் ஆயிஷா இருக்கிறார்.
அத்துடன் கடைசி 2 இடங்களில் குயின்சி மற்றும் நிவாஷினி இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த வாரம் நிவாஷினி வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இதனிடையில் நிவாஷினி அசல் உடன் காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டது தவிர, வேறு எதுவும் செய்யவில்லை என்பதால் அவரை வெளியேற்ற ரசிகர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.