விஜய் டிவியில் தற்போது முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 ஜனவரி 2023-ல் முடிவுக்கு வரும். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்தனர். முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரீயாக மைனா நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த வாரத்திலேயே வந்து விட்டார்.
இந்நிலையில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரீ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தனலட்சுமி மீண்டுமாக வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே வர உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வர அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.