Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS-ல் இருந்து வெளியேறியதும்…. ராபர்ட் மாஸ்டர் நடிக்கும் பட போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்த போது ராபர்ட் மாஸ்டர் பெரிதாக எந்த ஒரு போட்டியிலும் ஈடுபாடு இன்றி இருந்தார். இதன் காரணமாக அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் படத்தின் போஸ்டரானது வெளியாகி  இருக்கிறது. ஆகவே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அவரின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |