பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியாளர்கள் அந்த டிவி, இந்த டிவி என்ற டாஸ்க்கை நடத்தி வருகிறார்கள். அதில் நேற்று மலக்குழி மரணம் குறித்து அதன் போட்டியாளர்கள் நடத்திய நாடகம் அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
போட்டியாளர் விக்ரமன் மனிதனே மலம் அள்ளும் அவலத்தை குறித்து நாடகம் ஒன்றை பிக் பாஸ் டாஷ்கில் செய்து காட்டினார். அவரோடு நடிகை ரச்சிதா, அமுதவாணன் ஆகியோரும் நடித்தார்கள். அந்த காட்சி மலம் அள்ளும் அவலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அனைவருடைய மனதையும் உருக்கியது.
https://twitter.com/i/status/1588100699694370816