பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் 5 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக பிக்பாஸில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்ட்ரியாக அபிஷேக் ராஜா வந்துள்ள நிலையில் இன்றுடன் 50வது நாளை தொடுகிறது. இதனை முன்னிட்டு 50வது நாளை சிறப்பிக்க மேலும் ஒரு பிரபலம் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரபலம் நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் அல்லது நமீதா மாரிமுத்து, ஷாலு ஷம்மு இவர்களில் ஒருவர் அனுப்பப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.