பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. இந்த பிக்பாஸ் 6-ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி.ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றக போவதாக கூறப்படுகிறது.
அதேபோன்று 4 பேர் பிரபலம் இல்லாத நபர்கள் போட்டியாளர்களாக களமிறங்க இருக்கின்றனர். வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் 6 தொடங்கும் என ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. எனினும் இது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ்-6 வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் தொடங்கும் என ஜமாத் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.
Oct 9#biggbosstamil #biggbosstamil6
— Imadh (@MSimath) September 17, 2022