அசல் கோலாருக்கு எதிராக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, இந்த வீட்டில் போட்டியாளர்களிடம் அசல் கோலாரு நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரை திட்டி வருகின்றனர். அதன்படி, இவர் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட சரியில்லை என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்புங்கள் எனவும் கூறி வருகின்றனர்.