விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ் 6”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் வருகிற அக்டோபர் 9 ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா ரோஷினி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி, விஜே ரக்சன், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, மகாலட்சுமி, ஜி. பி முத்து என பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், கனா காணும் காலங்கள் சீரியலில் புலிகதாபாத்திரத்தில் நடித்தவர் ராகவேந்திரன். இவரிடம் பிக்பாஸ்க்கு ஏன் போக மாட்டீர்கள்? என அன்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இவர்,” நம்ம தான் செலிப்ரட்லி லிஸ்ட்லையும் இல்ல. கன்டென்ட் கொடுக்குற திறமையும் இல்ல. நம்மள எப்படி கூப்பிடுவாங்க?” என பதில் அளித்துள்ளார்.