பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘அலேகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து விட்டார் ஆரி. பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் இவர்தான் டைட்டில் வின்னர் என்றும் கூறிவருகின்றனர் . சமீபத்தில் நடிகர் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘பகவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக் பாஸ் வீட்டில் வெளியிட்டார்.
இந்நிலையில் நடிகர் ஆரியின் நடிப்பில் தயாராகியுள்ள ‘அலேகா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . இந்தப் படத்தில் கதாநாயகியாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார் . இந்த ட்ரெய்லரிலிருந்து ஐடி அட்டகாசம், குழந்தை கடத்தல், குழந்தை பராமரிப்பின்மை போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியதுதான் இந்த படம் என தெரிகிறது . அசத்தலான இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற வைத்துள்ளது .