விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறினார்கள்.
அப்போது அசீம் தன்னுடைய மகனுக்காக எழுதிய கடிதத்தை படிக்கும் போது திடீரென கதறி அழுதார். அப்போது அருகில் இருந்த விக்ரமன் அவரை கட்டி அணைத்து ஆறுதல் சொன்னார். எப்போதும் வீட்டுக்குள் எதிரும் புதிருமாக இருக்கும் அசீம் மற்றும் விக்ரமன் இருந்து வந்த நிலையில் தற்போது நடைபெற்ற நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான புரோமோ வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்கள்.