விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னாடி இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் இவரை கொண்டாடினார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் என கூற வேண்டும்.
இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் பிரபல சீரியலில் கமிட்டாகி உள்ளார். அதன்படி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவரின் என்ட்ரிகான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/ClN8b4noqoy/?utm_source=ig_embed&ig_rid=2f7426b7-d877-4515-b142-d7656ddc7670