Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் இறுதிச்சுற்றின் முடிவுகள்… யார் யாருக்கு எந்தெந்த இடம் ?… வலைத்தளங்களில் கசிந்த தகவல்கள்…!!!

பிக்பாஸ் சீசன் 4 இறுதிச்சுற்றின் முடிவுகள் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது ‌.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து தற்போது நான்காவது சீசனும் நிறைவடையும் நிலையில் உள்ளது . நாளை ஒளிபரப்பாகும் எபிசோடில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்பது தெரியவரும் . இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் இறுதி சுற்றின்  முடிவுகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது .

அதில் ஆரி தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் அடுத்ததாக நான்காவது , ஐந்தாவது இடங்களை ரம்யா, சோம் ஆகியோர் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்கள் உண்மையா ? என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும் .

Categories

Tech |