Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கோபத்தில் எச்சரித்த கமல்….. ஆடிப்போன அசீம்…. வைரலாகும் ப்ரோமோ….!!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் கலந்து கொண்டுள்ளார். இவர் சக போட்டியாளர்களிடம் அவமரியாதியாக பேசி வருகிறார். இதில் குறிப்பாக நடிகை ஆயிஷாவை பார்த்து வாடி போடி என்று கூறியது, விக்கிரமனை தர குறைவாக பேசியது, சக போட்டியாளர்களின் பாடி லாங்குவேஜை போன்ற செய்து அவர்களை கிண்டல் செய்தது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்கின் போது தனலட்சுமியையும்  மிகவும் மரியாதை குறைவாக பேசினார். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அசீமை கடுமையாக எச்சரித்துள்ளார். அதாவது நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும். நான் விமர்சிக்கல உங்களை கண்டிக்கிறேன் என்று ஆண்டவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |