விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா மற்றும் அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ஆய்ஷா, ராபர்ட் மாஸ்டர், விஜே கதிர், ஜனனி ஆகிய 8 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தனலட்சுமிக்கு தான் அதிக அளவில் நெகடிவ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே தனலட்சுமி மீது பார்வையாளர்களுக்கு வெறுப்பு இருந்து வரும் நிலையில், அவர் எப்போது பார்த்தாலும் போட்டியாளர்களிடம் கோபப்படுவது மற்றும் பிக் பாஸ் இடம் என்னை எப்படியாவது வெளியேற்றி விடுங்கள் என்று அடிக்கடி கூறுவது என பார்வையாளர்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் செயல்களையே செய்து வருவதால் அவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் தனலட்சுமிக்கு கமல் பாடம் எடுத்ததால் இந்த வாரம் அவர் சற்று அடங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டர் தான் அதிக அளவில் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்தவரின் மனைவி என்று கூட பாராமல் ரச்சிதாவை மாஸ்டர் தொடர்ந்து பல்வேறு விதங்களில் தொந்தரவு செய்து வருகிறார். இது பார்வையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாஸ்டரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இதனால் ராபர்ட் மாஸ்டர் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.