விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் கோலார் பெண்களிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அவர் பெண்களை தொட்டு தொட்டு பேசுவது நெட்டிசன்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அசல் நிஷாந்தினியை கட்டி அணைப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அசல் நிஷாந்தினியை கடிக்கும் ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து கமல்ஹாசன் தட்டிக் கேட்க மாட்டாரா என நெட்டிசன்கள் பலரும் இணையதளத்தில் கொந்தளித்துள்ளனர்.
Enna Enna pandren Parunga Asal Kolaaru🤧
Nive😪 #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/MNprJfEic5— exclusive videos of BB (@gpMuthuarmy3) October 26, 2022