பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஷிவானியின் மாற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேல் பங்கேற்றவர் ஷிவானி நாராயணன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம் . இதுயடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் ரசிகர்கள் இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவிற்கு சிவானி எதுவும் செய்யாதது ஏமாற்றத்தை அளித்தது . இறுதியாக டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு சிங்கப் பெண்ணாக வெளியேறினார்.
All is well ❤️ pic.twitter.com/D1BKnLyHxd
— Shivani Narayanan (@Shivani_offl) January 20, 2021
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சமூக வலைத்தளங்களில் சிவானி மீண்டும் புகைப்படங்களை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர் . ஆனால் திடீர் திருப்பமாக சிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கவர்ச்சி புகைப்படங்களை நீக்கினார் . இந்நிலையில் சிவானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் டீசன்டான , அழகான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். ஷிவானியின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் தெரியவில்லை இருப்பினும் இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது .