பிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்துள்ள ‘குருதிக்களம்’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் சனம் ஷெட்டி . இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்ற வெப் தொடர் வருகிற ஜனவரி 22ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
கிரைம் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நடிகர் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சௌந்தரராஜா, அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த வெப் தொடரை இயக்குனர்கள் தனுஷ் மற்றும் ராஜபாண்டி இணைந்து இயக்கியுள்ளனர் . இன்று குருதிக்களம் வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.