தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நாகார்ஜுனா தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் சரியான முறையில் வரவேற்பு இல்லாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதி கூறி வழக்கு விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்தார். தற்போது பிக் பாஸ் சீசன் சிக்ஸ் 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் நிகழ்ச்சி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீதிமன்றத்தின் நோட்டீஸ் காரணமாக நிகழ்ச்சியை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், நாகார்ஜுனா நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.