Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சுரேஷ் தாத்தா மிரட்டப்பட்டாரா?… ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் ஷாக்…!!!

பிக்பாஸ் சுரேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிக் பாஸ் வீட்டில் கடைசி வாரத்திலும் வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர் . இவர்களில் கடைசியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் சுரேஷ் தாத்தா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதில் சிக்கல் இருந்ததாகவும் , நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இதையடுத்து கடைசி ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே சுரேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘சட்டம், ஒப்பந்தங்கள் சில நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்தும்.  ஆனால் ஆண்டவர் போன்ற தூய உள்ளங்கள்  நமக்கு  நல்ல மருந்தாக உள்ளது. நன்றி தலைவரே ‘ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவால்  அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் ‘பிக்பாஸில் சுரேஷ் ஒப்பந்தங்களை காட்டி மிரட்டப்பட்டாரா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |