Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி நடிக்கும் முதல் படம்… வெளியான தகவல்கள்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன் இவர் நடிப்பில் தயாராகியிருந்த எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ,பகவான் ,அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரி ஒப்பந்தமாகி உள்ள முதல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு

சௌரியா புரோடக்சன்ஸ் சுப்பையா மற்றும் அபின் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்க உள்ளார் . அறிமுக இயக்குனர் அபின் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும், விவேக் பாடலாசிரியராகவும், ஸ்டெர்லின் நித்தியா இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளனர் . இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது . இந்த பூஜையில் இயக்குனர்கள் ஏ ஆர் முருகதாஸ் , சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர் .

Categories

Tech |