பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது . அதில் உரியடி , ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற பாரம்பரிய பொங்கல் விளையாட்டுக்கள் நடைபெறுகிறது.
#Day102 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6rKjTbL8eT
— Vijay Television (@vijaytelevision) January 14, 2021
பொங்கல் வைத்து போட்டிகளில் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என போட்டியாளர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதனால் இன்றைய எபிசோட் மிக கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த ஒரு சீசனிலும் பொங்கல் பண்டிகை கொண்டாட போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு தீபாவளி, கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு ,பொங்கல் ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.