Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டின் கடைசி நாமினேஷன்… சிக்கப்போவது யார் யார் ? … வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று கடைசி நாமினேஷன் பிக்பாஸ் வீட்டில் நடைபெறுகிறது . இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை போட்டியாளர்கள் அனைவரின் முன் தேர்ந்தெடுக்கின்றனர் . இதில் ஆரி ரியோவை நாமினேட் செய்கிறார் . ‘இதற்கான காரணம் பாலாவும் நானும் பேசிக்கொண்டிருக்கும்போது ரியோ கூறிய விஷயங்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்டேன் . அந்த விளக்கம் எனக்கு முழு திருப்தி இல்லை அதனால் ரியோவை நாமினேட் செய்கிறேன்’ என ஆரி கூறுகிறார்.

 

இதையடுத்து சோம் கோபம் நல்லது இல்லை அதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி பாலா, ஆரி இருவரையும் நாமினேட் செய்கிறார் . அடுத்ததாக வந்த ரியோ டாஸ்கின் போது பொண்ணு வந்தப்ப கூட ஃப்ரீஸில் இருந்ததாக ஆரி கூறியதாகவும் நான் ஒரு இடத்தில் தப்பா தெரிய வாய்ப்பு இருக்குது அந்த அளவுக்கு நான் கேவலமானவன் இல்லை என கூறுகிறார் . இதிலிருந்து பாலா மற்றும் ஆரி இருவரும் நோமினேஷன் லிஸ்டில் இருப்பது உறுதியாகியுள்ளது . இவர்களை தவிர வேறு யாரு நாமினேஷனில் சிக்கியுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |