Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சம்யுக்தா… கண்கலங்கிய பாலாஜி… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் ‌. நேற்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ,ரேகா ஆகியோர் ரகசிய அறை வழியே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக பிக்பாஸ் வீடு களைகட்டியது . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அதில் சம்யுக்தாவை பார்த்தவுடன் பாலா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்குகிறார் . பின் பாலா சம்யுக்தாவை மிஸ் செய்வதாக கூறுகிறார்.

Categories

Tech |